Zero scorer turns astrophysicist, Pichai lauds
New Delhi
Nov 22 (IANS) Google CEO Sundar Pichai were among some of the world's top tech leaders and scientists who commended a woman for pursuing science despite scoring zero on a quantum physics exam only a few years ago.
Today Sarafina Nance is doing PhD in astrophysics at one of top institutions in the world, the University of California, Berkeley. The 26-year-old astrophysicist is researching supernovae.
"4 years ago I got a 0 on a quantum physics exam. i met with my professor fearing i needed to change my major & quit physics. today, i'm in a top tier astrophysics Ph.D program & published 2 papers. STEM is hard for everyone -- grades don't mean you're not good enough to do it (sic.)," she said in a tweet on Thursday which has now been liked over 57,000 times and retweeted over 10,000 times.
"Well said and so inspiring!," Pichai said in response.
The inspiring story of the young astrophysicist who is also a breast cancer survivor opened the gates for a flood of similar stories.
பூஜ்ஜியம் மதிப்பெண்ணில் இருந்து வானியற்பியலாளராக உயர்ந்த மாணவிக்கு கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை புகழாரம்
புதுடெல்லி
குவான்டம் இயற்பியல் பாடத் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னால் பெற்ற ஒரு மாணவி அதனால் சற்றும் சோர்வடையாமல் மேற்கொண்டு படித்து மிகச் சிறந்த அறிவியலாளராக உருவெடுத்திருக்கிறார். இவருக்கு கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் விஞ்ஞானிகளும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சாராஃபினா நான்சி தற்போது வானியற்பியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்ளி நகரத்தில் உள்ளது கலிபோர்னியா பல்கலைக்கழகம். உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று இது. இங்கு சூப்பர்நோவா குறித்து இந்த 26 வயதான பெண் வானியற்பியல் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குவான்டம் இயற்பியல் பாடத் தேர்வில் வெறும் பூஜ்ஜியம் வாங்கினேன். அச்சத்தில் உடனடியாக என்னுடைய பேராசிரியரை சந்தித்து இயற்பியல் பிரிவில் இருந்து விலகி வேறு பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இன்று உலகின் முன்னணி வானியற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
இரண்டு ஆய்வுத் தாள்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பாடப்பிரிவுகள் எல்லோருக்குமே கடினமானவைதாம். ஆகையால் மதிப்பெண்களை வைத்து நீங்கள் அறிவியல் படிக்க லாயக்கற்றவர் என்று சொல்லிவிட முடியாது” என்று கடந்த வியாழன் அன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நான்சி பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ தெரிவித்திருக்கிறார்கள். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதைப் பகிர்ந்துள்ளனர்.
“சரியாக சொன்னீர்கள், மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று சுந்தர் பிச்சை இதற்கு எதிர்வினையாற்றி இருந்தார். இந்த இளம் வானியற்பியலாளர் மார்பக புற்று நோயில் இருந்து
மீண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago