ஜி.எஸ்.எஸ்.
சாலையில் நடந்து செல்கிறார்கள் சுஜாதாவும், கோபியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல் இது.
Gopi – (shows a building and says) This is my bank.
Sujatha – So, you have your account here.
Gopi – Yes. Me and my father have accounts here.
Sujatha – (smiles) What is your money in your account?
Gopi – 2,000 Rupees.
Sujatha – O, so you are a rich person!
Gopi – No. No. We are middle only.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
வங்கியை குறிக்க bank என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆறு போன்ற நீர்நிலைகளின் கரையை குறிக்கவும் bank என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. River bank என்பதைப் போல.
Me and my father have an account here என்கிறார் கோபி. இது I and my father என்று இருக்க வேண்டும். இதுபோன்ற சந்தேகம் வந்தால் ஒவ்வொரு வார்த்தையையும் கொண்டு அந்த வாக்கியம் சரியாக அமைகிறதா என்பதைப் பாருங்கள்.
I have an account here என்பது சரியா? அல்லது Me have an account என்பது சரியா? I have an account என்பதுதான் சரியானது என்று தோன்றுகிறது இல்லையா? அப்போது I என்ற வார்த்தையைத் தான் இங்கு பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல I, you, he, she, they போன்ற பலவற்றையும் ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்துப் பயன்படுத்தும்போது I என்பது இறுதியாகத்தான் இடம்பெற வேண்டும். அதாவது மேற்படி வாக்கியம் my father and I have an account here என்று இருக்க வேண்டும்.
சுஜாதா what is your money in your account என்று கேட்கிறாள். இது what is the balance in your account என்பதாக இருக்க வேண்டும். தான் பணக்காரன் அல்ல என்றும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்தான் என்பதைக் குறிக்க we are middle only என்கிறான் கோபி. Middle class என்பதை அவன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago