மொழிபெயர்ப்பு: ஆக்ஸ்போர்டு பிக் ரீட்’ ஆசிய போட்டிக்கு 5 இந்திய மாணவர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

5 Indian students qualify for Oxford Big Read Asia contest

New Delhi

Five students from India are among the finalists of Oxford Big Read Asia Challenge, an annual reading and writing campaign for primary and secondary students.
The winners from India are B R Nimeesha (from Madurai), Ananya Sheorey, Saara Sen, Neha Chhajed and Sama S Jahagirdar (all from Nagpur), a statement from Oxford University Press said.
Among the other winners are two students from China and one each from Pakistan and Malaysia.
The competition had 6,000 submissions from schools in China, Malaysia, Pakistan and India. Three hundred students from 20 schools across India participated in the competition.
The prizes include an iPad, an OUP books bundle, a cash award and a certificate. Winners are selected nationally through participating Oxford University Press branches, and then become semi-finalists in the regional competition across Asia.
Speaking about the competition, Sivaramakrishnan Venkateswaran, Managing Director of OUP India, said, We believe that early age interest in reading and writing is fundamental to ensuring better learning outcomes in young learners.
He added that Oxford Big Read Asia provides students with an opportunity to augment the ambit of their reading and also demonstrate their literary and creative skills.

- PTI

‘ஆக்ஸ்போர்டு பிக் ரீட்’ ஆசிய போட்டிக்கு 5 இந்திய மாணவர்கள் தேர்வு

புதுடெல்லி:

தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வாசித்தல் மற்றும் எழுத்துத் திறனை ஊக்குவிக்க ‘ஆக்ஸ்போர்டு பிக் ரீட்’ ஆசிய போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இறுதி போட்டியாளர்களாக இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இம்முறை தேர்வாகி உள்ளனர். மதுரையை சேர்ந்த பி.ஆர்.நிமிஷா, நாக்பூரைச் சேர்ந்த அனன்யா ஷியோரே, சாரா சென், நேஹா சாஜெத் மற்றும் சாமா ஜஹாகிர்தார் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெற்றி பெற்றுஆசிய அளவிலான இறுதிப் போட்டிக்
குத் தேர்வாகி உள்ளனர் என்று ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரெஸ் தெரிவித்திருக்கிறது.

இவர்களைத் தவிர சீனாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் பாகிஸ்தான் மற்றும் மலேசியாவில் இருந்து தலா ஒரு மாணவரும் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகி உள்ளனர். சீனா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து மொத்தம் 6,000 மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்தியாவைப் பொருத்த
வரை 20 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றியாளர்களுக்கு ஒரு ஐபேட், ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரெஸ் வெளியிட்ட புத்தகங்கள் ஒரு அடுக்கு,
ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை பரிசுகளாக வழங்கப்படும். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரெஸ் கிளைகளில் தேசிய அளவில் முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்கள் ஆசியளவிலான அரையிறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரெஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான சிவராமகிருஷ்ணன் வெங்கடேஸ்வரன் இந்தப் போட்டி குறித்து பேசுகையில், “இளவயதிலேயே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டால் அது அவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்த கைகொடுக்கும்” என்றார்.

அந்த வகையில் மாணவர்களுக்கு வாசிப்பில் ஈடுபாடு உண்டாகவும் அவர்கள் தங்களுடைய இலக்கிய மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் ‘ஆக்ஸ்போர்டு பிக் ரீட் ஆசிய’ போட்டி வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்