ஜி.எஸ்.எஸ்
ரமணனும், சுந்தரியும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஆனால், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கிறார்கள். அவர்கள் தற்செயலாக சாலையில் சந்தித்தபோது உரையாடுகிறார்கள்.
Sundari – Hi Ramanan, how this side?Ramanan – I came to purchase something.
Sundari – What did you purchase?Ramanan – I purchased some cloths, i.e. two tea shirts and one pant.
Sundari – Any rare occasion?Ramanan – My sister is getting married. I will invite you also for the marriage. Please do come to the marriage.
Sundari – Thanks for the invitation.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்தஉரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
ஒருவரை எதிபாராத இடத்தில் சந்திக்கும்போது தமிழில் ‘‘எங்கேஇந்தப் பக்கம்?’’ என்று கூறுவதுண்டு. ஆனால், இதை அப்படியே‘‘How this side?” என்று மொழிபெயர்த்தால் அது விசித்திரமாகவும், தவறாகவும் இருக்கும். ‘‘How comeyou are here?’’ என்பதுபோல் கேட்பது சகஜமானது.
ரமணன், I purchased some cloths என்கிறான். Cloth என்றால் துணி. Clothe என்றால் ஆடை. சட்டைத்துணி அல்லது பேண்ட் துணி என்றால் cloth. ரெடிமேட் சட்டை அல்லதுரெடிமேட் பேண்ட் என்றால் அது clothe.
ரமணன் வாங்கியிருப்பது டி ஷர்ட் மற்றும் பேண்ட். எனவே இவை clothesஎன்றுதான் அழைக்கப்பட வேண்டும்.
தமிழில் டி ஷர்ட் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் எழுதும்போது T-Shirt என்றுதான் எழுத வேண்டும்.
Tee-shirt என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், தேநீருக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை – அதாவது Tea Shirt அல்ல.
Pant, trouser, scissor என்றெல்லாம் ஒருமையில் குறிப்பிட மாட்டோம். Pants, trousers, scissors என்றுதான் குறிப்பிட வேண்டும்.
சுந்தரி ‘‘any rare occasion’’ என்கிறார். (இந்த வார்த்தையில் இரண்டு ‘cc’ மற்றும் ஒரு ‘s’ உள்ளன என்பதைக் கவனித்தீர்களா? இதை மாற்றி எழுதி தவறு செய்பவர்கள் உண்டு). இதற்குப் பதிலாக Any special occasion என்று குறிப்பிடுவது மேலும் பொருத்தம்.
Please come to the marriage என்பதைவிட please attend the wedding என்பது மேலும் சரியான பயன்பாடு.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago