மொழிபெயர்ப்பு: போக்குவரத்து நெரிசலின் போது ட்ரோன்கள் முலம் உயிர்க்காக்கும் மருந்து பட்டுவாடா

By செய்திப்பிரிவு

'Drones may deliver life-saving medicines during rush hour traffic'

Washington

Drones may deliver life-saving interventions faster than ambulances in the case of emergencies like drug-overdose, or a mass casualty scene, according to a study.
The researchers, including those from the American Academy of Pediatrics in the US, found that drones arrived faster than ambulances when transportation times were compared during peak rush hour in Brooklyn, New York in the US.


They compared the data for Emergency Medical Services (EMS) and Unmanned Aerial Vehicle (UAV) flight data within a zip code in urban Brooklyn, and found that the drone response times were quicker than the standard EMS ambulance response, especially during peak rush hours.


According to the researchers, if the UAVs were equipped with two-way communication and possible life-saving interventions, they could save lives by responding to emergency conditions like acute anaphylaxis, opiate overdose, asthma, cardiac arrest, and sarin poisoning.


"Drones, when used appropriately, represent the idealmarriage between enhanced prehospital care and telemedicine for our future," said co-author of the study Mark Hanna from the American Academy of Pediatrics.- PTI

போக்குவரத்து நெரிசலின் போது ட்ரோன்கள் முலம் உயிர்க்காக்கும் மருந்து பட்டுவாடா

வாஷிங்டன்

பெருத்த உயிர் சேதம் அல்லது மருந்து அதிகப்படியாக உட்கொண்டதால் உயிருக்கு ஆபத்து போன்ற அவசரகாலச் சூழலில் ஆம்புலன்ஸ்களை காட்டிலும் ட்ரோன்கள் உயிர்காக்க பயன்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின்பகுதியில் போக்குவரத்து நெரிசலான வேளையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ்களை விடவும் விரைவாக ட்ரோன்கள் வந்து சேர்வதை அமெரிக்கன்
அகாடமி ஆஃப் பிடியாட்ரிக்ஸ் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அவசரகால மருத்துவ சேவைகளின் தகவல்களையும் ஆளில்லா வான்வழி வாகனத்தின் தகவல்களையும் நகர்புற புரூக்ளின் ஜிப் குறியீட்டுடன் அவர்கள் ஒப்பிட்டனர். அப்போது போக்குவரத்து நெரிசலாக இருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ்களை விடவும் ட்ரோன்களின் செயல்பாடு பல மடங்கு துரிதமாக இருந்தது தெரியவந்தது.

தகவல் பரிமாற்றத்தை இரண்டு வழிகளிலும் செயல்படுத்தக்கூடிய வகையில் ஆளில்லா வான்வழி வாகனங்கள்
தயார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அவற்றை உயிர்காக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, மருந்தினால் ஒவ்வாமை, ஒப்பியத்தை அதிகப்படியாக உட்கொள்ளுதல், ஆஸ்துமா, மாரடைப்பு, விஷவாயு தாக்குதல் போன்ற ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்.

“சரியாக பயன்படுத்தினால், மருத்துவமனைக்கு முந்தைய கவனிப்பின் மேம்பட்ட வடிவத்துக்கும் தொலைமருத்துவ சேவைக்கும் இடையிலான நிறைவான திருமண பந்தமாக ட்ரோன்கள் எதிர்காலத்தில் மாறும்” என்று ஆய்வுக்குக் குழுவில் ஒருவரான அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிடியாட்ரிக்ஸைச் சேர்ந்த மார்க் ஹன்னா தெரிவித்தார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்