ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? இதைத்​ தூக்குவது கஷ்டமோ!

By ஜி.எஸ்.எஸ்

ஜி.எஸ்.எஸ்.

கோமதியும், மலர்விழியும் பள்ளி வளாகத்தில் வகுப்புக்கு வெளியே அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உரையாடலின் ஒரு பகுதி இது.
Gomathi – Tell something about your future ambition.
Malarvizhi – I become a scientist… sorry, I will be a scientist… Sorry, I will become a scientist in future.
Gomathi – How much do you like science?
Malarvizhi – Too much.
Gomathi – My best wishes to you.
Malarvizhi – Thanks lot.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

I become a Scientist என்று கூறியது தவறு என்பதை மலர்விழியே புரிந்துகொள்வதால் அந்த வாக்கியத்தை திருத்திக்கொள்கிறாள். பிறகு “I will be a scientist” என்கிறாள். இதற்கு நான் ஒரு வி​ஞ்ஞானியாக இருப்பேன் என்று பொருள். பிறகு “I will become a scientist in future” என்கிறாள். இலக்கணப்படி இதில் தவறு இல்லை. ஆனால், I will become a scientist என்றாலே அது வருங்காலத்தைத்தானே குறிக்கிறது. In future சொற்கள் இங்கு தேவை இல்லாதவை.

How much என்ற கேள்விக்கு too much என்று பதிலளிப்பது தவறு. Very much என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். மேலோட்டமாக பார்த்தால் very,too ஆகிய வார்த்தைகள் ஒன்று போலத் தோன்றலாம். ஆனால், இவற்றுக்கிடையே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. Too என்பதைப் பயன்படுத்தும்போது அதில் கொஞ்சம் எதிர்
மறை அர்த்தம் தொனிக்கும். The box is very big என்றால் அது பெரிய பெட்டி என்று அர்த்தம்.

அது சாதாரண அர்த்தம் தான். அல்லது நிறைய பொருளை வைக்க முடியும் என்கிற பொருளையும் very much என்பது ஓர் உயர்வான பொருளையும் கொடுக்கிறது. மாறாக “The box is too big’’என்றால் இது மிகப் பெரிய பெட்டி. “இதைத்​ தூக்குவது கஷ்டம்’’ என்பது போன்ற ​எதிர்மறை அர்த்தத்தை அளிக்கிறது. தவிர too என்ற சொல் ஒரு வாக்கியத்தில் இடம்பெற்றால் அதே வாக்கியத்தின் பிற்பகுதியில் to என்ற வார்த்தையும் பெரும்பாலும் இடம்பெறும். This news is too good to believe என்றால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும் அளவுக்கு இது மிக நல்ல செய்தி என்று பொருள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்