இனி யாருக்கும் schadenfreude செய்யாதீர்! | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 108

By ஜி.எஸ்.எஸ்

நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை I am happy too, I am happy either ஆகிய இரண்டு வாக்கியங்கள் மூலமாகவும் உணர்த்தலாமா? - ஒருவர் I am happy என்று கூறும்போது, ‘நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்பதை வெளிப்படுத்தும் வகையில் I am happy too என்று கூறலாம். I am also happy என்றும் கூறலாம்.

ஒருவர் I am not happy என்று கூறும்போது, I am not happy either என்று பதிலுக்கு கூறினால் ‘நானும் மகிழ்ச்சியாக இல்லை’ என்று பொருள். அதாவது எதிர்மறைத் தன்மை கொண்ட ஒரு கருத்தை வழிமொழியும்போது either என்ற சொல் ஏற்றதாக இருக்கும்.

முடிவெடுத்தாகிவிட்டது என்பதைக் குறிக்க die is cast என்று கூறுவதுண்டு. இதில் die என்ற வார்த்தை எதற்காக வரவேண்டும்? ஒருவேளை இறப்புக்கான நாள் குறித்தாகிவிட்டது என்பதற்கு சமமான வாக்கியமா அது? - ‘முடிவெடுத்தாகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது’ என்பதைத்தான் the die is cast என்பது உணர்த்துகிறது. இதில் உள்ள die என்பது இறப்பு தொடர்பானது அல்ல. Dice என்பது ஒருஜோடி பகடைக்காய்களை குறிக்கிறது. அதன் ஒருமை die. பகடைக் காயை உருட்டியாகிவிட்டது. இனி அதன்படிதான் என்பதே இதற்குப் பொருள்.

மாற்ற முடியாத தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதனால் ஒரு குறிப்பிட்ட சூழல் உருவாகும்போதும் the die is cast என்று கூறுவதுண்டு. From the moment the negotiations with the workers union failed, the die was cast and strike was inevitable. ரோமானிய சட்டத்தை மீறி ரூபிகான் என்ற நதியை ஜுலியஸ் சீசர் தலைமையிலான படைகள் கடந்தபோது, அவர் லத்தீன் மொழியில் Alea iacta est என்றாராம். ஆங்கிலத்தில் இது die is cast. வீசிவிட்ட பகடைக்காயை திரும்பப் பெற முடியாது. எனவே எடுத்த தீர்மானத்துக்கான விளைவை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இனி யாருக்கும் schadenfreude செய்யாதீர்கள் என்று பிரபல நடிகை ஒருவர் பிரபல நடிகருக்கு சமீபத்தில் ஆலோசனை கூறியிருக்கிறார். இந்த ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? - இது ஒரு ஜெர்மன் வார்த்தை. ஜெர்மானிய மொழியில் Schaden என்றால் தீங்கு அல்லது சேதம். Freude என்றால் மகிழ்ச்சி. பிறரது சோகத்தில் மகிழும் தன்மையைத்தான் இந்தச் செயல் குறிக்கிறது. இதை ஆங்கிலத்தில் epicaricacy என்று குறிப்பிடுவார்கள். நமக்கு அதிகம் அறிமுகம் ஆன sadism என்பதும் இதைக் குறிப்பதுதான். Gloat என்று சொல்லும் ஏறக்குறைய இதைத்தான் குறிக்கிறது. Gloating over an enemy’s troubles.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்