Violin என்பதன் சுருக்கம்தான் viola என்பதா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 105

By ஜி.எஸ்.எஸ்

இசைக்கருவிகளின் பெயர்களை சுருக்கி அழைப்பது சகஜம்தான். Sax என்பது saxophone என்பதன் சுருக்கம். Cym என்பது cymbals என்பதன் சுருக்கம். Org என்பது organ என்பதன் சுருக்கம்.

ஆனால், viola என்பது violin என்பதன் சுருக்கம் இல்லை.  Viola என்பது சற்றே பெரியது. அது violin இசைக்கருவியின் வேறுவடிவம்.

I am angry என்கிறார்களே, I am anger என்று கூறக் கூடாதா? - Anger என்பது கோபம். Angry என்பது ‘கோபமாக’. நீங்களே கூறுங்கள், ‘நான் கோபமாக இருக்கிறேன்’ என்பது சரியா? அல்லது ‘நான் கோபம் இருக்கிறேன்’ என்பது சரியா?

Don’t talk rubbish என்கிறோமே, rubbish என்பது என்ன? - தேவையற்ற பொருள்கள், குப்பை கூளம் ஆகியவை rubbish என்று குறிப்பிடப்படுகின்றன.

சிலவற்றை மோசமானது அல்லது அபத்தமானது எனக் கருதுவோம். அவற்றை நாம் rubbish என்று விவரிக்கக்கூடும். The film was absolute rubbish.

வதந்தியை grape wine என்கிறார்களே ஏன்? திராட்சையில் தயாரிக்கப்படும் மதுவுக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? - அது grape wine இல்லை. Grapevine, அதாவது திராட்சைக் கொடி. திராட்சைக் கொடிகளின் வேர்கள் கீழ்ப்புறம் பல திசைகளிலும் படர்ந்து இருக்கும். அதுபோல வதந்திகள் எல்லையற்று வெகு வேகமாக பல இடங்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. அதனால்தான் வதந்திகளுக்கு இந்தப் பெயர்.

Past tenseக்கு அதைவிட past tenseஐ பயன்படுத்துவது எப்படி? - மேற்கோள் குறியைப் பயன்படுத் தலாம். He said, ‘I went to hospital’ எனும்போது அவர் கூறியதே கடந்த காலம். அவர் மருத்துவமனைக்குச் சென்றது அதைவிடக் கடந்த காலம் என்றாகிறது.

அ​ல்லது இரு கடந்த கால நிகழ்வு களைக் குறிக்கும்போது ஒன்றை past continuous ஆக்கி விடுவதுண்டு.

‘நான் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கே குழந்தைகள் விளையாடி​க்

கொண்டிருந்தனர்’. இதை When I entered the house, children were playing there எனலாம்.

ஒரு வாசகர் சமீப​த்தில் already tolded என்ற பயன்பாடு உண்டா என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. இல்லை என்று பதில் அளித்தபோது he ‘understooded’.

பொன்னியின் செல்வன் படத்தில் பழுவூர் மாளிகையில் சதியாலோசனை நடக்கும். இது போன்ற சதியாலோசனைகளை ஆங்கிலத்தில் எப்படி குறிப்பிடலாம்? - படத்திலோ நிஜத்திலோ நடை பெறும் சதியாலோசனையை conclave என்று குறிப்பிடலாம். அது ரகசியமாக நடக்கும் ஒன்று. கத்தோலிக்க மதத்தின் கார்டினல்கள் ரகசிய அறை ஒன்றில் கூடி புதிய போப்பை தேர்ந்தெடுப்பார்கள். இதையும் conclave என்று குறிப்பிடுவது வழக்கம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்