Motive, motivation இரண்டும் ஒன்றா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 104

By ஜி.எஸ்.எஸ்

Motive என்பது நோக்கம். தேர்வில் வெற்றிபெறுவதுதான் அவரது motive. இந்தக் கொலையை செய்ய அவருக்கு motive இல்லை. Motivation என்பது ஊக்கப்படுத்தும் சக்தி. Some students need motivation to spend more time for studies. Watching olympics provided her the motivation to be a sportswoman.

Snort என்பது வஞ்சக சிரிப்பா? - மூக்குப்பொடி போடும்போது ஒருவித சத்தத்தோடு பொடியை உள்ளே இழுத்துக் கொள்வார்களே, அது snort. செருமுதலையும் இந்தச் சொல் குறிக்கிறது. ஒருவர் ஒரு கருத்தைக் கூறும்போது அதை அவமதிப்பது போன்று தொண்டையால் ஒலி எழுப்புவதைக் குறிப்பாக உணர்த்துகிறது. ஏளன வெளிப்பாடு.

As I am suffering from fever என்று தொடங்கும் விடுப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் அளிக்க வெட்கமாக இருக்கிறது. மாற்றுச் சொற்களைக் கொடுங்களேன். - அதற்காக ‘As I am suffering from scolionophobia’, ‘As I am suffering fromergophobia’ என்று தொடங்கும் விடுப்புக் கடிதத்தையா கொடுக்க முடியும்? (Scolionophobia என்பது பள்ளி தொடர்பான மிக அதிகமான பயத்தைக் குறிக்கிறது. Ergophobia என்பது பணி அல்லது பணியிடம் தொடர்பான அதீத அச்சம்).

As I am running high temperature, Due to my ill health, As recommended by my doctor என்பதில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். - குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் fever என்பதற்குப் பதிலாக அந்த நோயின் பெயரைப் பயன்படுத்தலாம். அதற்காக எவரும் As I am suffering from ‘Kondaatam’ என்று தொடங்கும் விடுப்பு விண்ணப்பத்தை அளித்துவிடக்கூடாது.

We cordially invite என்பதைத் தொடர்ந்து இடம்பெற வேண்டிய preposition எது? For என்பதா? To எ​ன்பதா? - தொடர்​வது ஒரு நிகழ்ச்சி என்றால் for. தொடர்வது ஓர் இடம் என்றால் to.

I cordially invite you for my birthday party. I cordially invite you to my house.

Fable, Fiction என்ன வித்தியாசம்? - Fable என்பது நீதிக்கதை. அதில் ​விலங்குகள் முக்கிய பாத்திரங்களாக இருக்க வாய்ப்பு அதிகம். பாட்டி-காக்கா-நரி, முயல்-ஆமை பந்தயம் போன்றவை fables. Fiction என்பது கற்பனை நிரம்பிய கதை. Anecdote என்பது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

Beneficent persons என்பவர்கள் யார்? பலன்களை அடைபவர்களா? - இல்லை. கனிவான மனிதர்கள். Beneficial என்பதுதான் பலனுள்ள என்பதைக் குறிக்கும் சொல். Beneficial scheme. Beneficial medicine.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்