ஆம். வீட்டில் அடைந்து கிடக்கும் மனைவி என்பதைவிட குடும்பத்தை உருவாக்குபவர் என்பது கவுரவமான ஒரு விவரிப்பு. இதில் வேறொரு கோணமும் இருக்கிறது. வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கும் ஆணும் தன்னை homemaker என்று கூறிக்கொள்கிறார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட சூழலும் அதிகம் கிடையாது. Househusband என்ற சொல்லும் கிடையாது.
Pretty cash என்று அலுவலகக் கணக்குகளில் குறிக்கப்படுவது எது? - அது petty cash. Petty என்பது அற்பமான அல்லது முக்கியத்துவம் இல்லாத என்பதை குறிக்கிறது. Petty minded என்றால் குறுகிய மனப்பான்மை கொண்ட என்று பொருள். Petty cash என்பது அவ்வப்போது நிகழக்கூடிய சிறு சிறு செலவுகளுக்காக அலுவலகங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தொகை.
வழக்காடு மன்ற உத்தரவு அல்லது கடிதங்களில் learned counsel என்று குறிப்பிடுகிறார்கள் அதற்கு அர்த்தமென்ன? - Counsel என்றால் வழக்கறிஞர் அல்லது ஆலோசகர். கற்றறிந்த என்னும் பொருளைத் தருகிறது learned என்ற சொல்.
Outdate என்று சொல் இருப்பது போல் indate என்ற சொல்லும் இருக்கிறதா? - Outdated என்றால் பழைய நாகரிகம். அதாவது இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு உரியதல்ல.
» கரண் ஜோஹரின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 50% பங்குகளை வாங்கும் ஆதார் பூனாவல்லா
» “பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” - பிரதமர் மோடி
அதற்கு எதிர்ச்சொல் போலத் தோற்றமளிக்கும் indate என்ற சொல் புழக்கத்தில் இல்லை. In date என்று பிரித்து எழுதினால் ‘காலாவதியாகாத’ என்று பொருள் உண்டு. Ensure that your licence is still in date.
எனினும் Update என்ற சொல் உண்டு. அதற்குப் பொருள் சமீபத்திய தகவலை ஒருவருக்கு அளிப்பது. We will update you on this news story for two days. They have updated a lot of the entries in their website.
Inundate என்ற சொல்லும் உண்டு. We were inundated with applications for this job என்றால் இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்துவிட்டன என்று பொருள். அதாவது ‘நாங்கள் விண்ணப்பங்களால் மூழ்கடிக்கப் பட்டோம்’. After the heavy rains the fields were inundated - பெருமழை காரணமாக வயல்கள் மூழ்கடிக்கப் பட்டன.
Logistics என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறேன். தர்க்கத்துடன் இதற்குத் தொடர்பு உண்டா? - தர்க்கரீதியாக என்பதை உணர்த்தும்logic என்பதற்கும் logistics என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளைத் திட்டமிடுவதும் ஒருங்கிணைப்பதும்தான் logistics.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago