படிக்கட்டுகள் பலவிதம் | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 98

By ஜி.எஸ்.எஸ்

விமான நிலையங்களில் கவனித்திருக்கிறேன். நீளமான நகரும் பாதை அங்கங்கே இருக்கும். அதில் நின்றுகொண்டால் தானாக சமதளத்தில் தொலைவில் உள்ள இடத்துக்கு செல்லும். இதற்குப் பெயர் elevatorஆ அல்லது escalatorஆ? - அதற்கு பெயர் travelator. லிஃப்ட் என்று நாம் வழக்கமாகக் கூறுவது elevator. பெரிய பெரிய ‘மால்’களில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்குச் செல்ல நகரும் படிக்கட்டுகள் இருக்கும்.

அது escalator. படிக்கட்டு என்றதும் வேறொன்றையும் பகிரத் தோன்றுகிறது. வீட்டுக்குள் நுழையவும் படிகள் இருக்கும். வீட்டுக்குள்ளே மாடியை அடையவும் படிகள் இருக்கும். முதலில் சொன்னது steps. இரண்டாவது stairs. Staircase என்பது மாடிக்குச் செல்வதற்கான, கைப்பிடிக் கம்பிகள் அடங்கிய படிக்கட்டுத் தொகுதி.

ஒரு OTT தொடரில் Three is a crowd என்று கூறிவிட்டு ஒரு பெண்மணி சிரித்தார். தற்கு என்ன பொருள்? - ‘Two is company. Three is a crowd’ என்பது ஒரு பழமொழி. காதலர்கள் தனிமையை விரும்பும் போது மூன்றாவதாக ஒருவர் அவர்களோடு இருப்பது காதலர்களின் அந்தரங்கத்தை கெடுத்துவிடும் என்பதை குறிக்கிறது இது.

‘No. I won’t join you. Three is a crowd’ என்று கூறி ஒருவர் நாசூக்காக ஒதுங்கிக் கொள்ளலாம். காதலர்கள்தான் என்றில்லை, நெருங்கிய நண்பர்கள், ரகசியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் இருவர் ஆகியோர் தொடர்பாகவும் மேற்படி பயன்பாடு இருக்கலாம்.

இடக்கையால் எழுதுபவரை left hander என்று கூறலாமா? அவரை ambidextrous என்று கூறினாலும் தவறில்லையா? - எழுதுவது மட்டுமல்ல, பெரும்பாலானோர் வலது கையால் செய்வதில் 70 சதவீதம் செயல்களையாவது இடது கையால் செய்பவரைத்தான் left hander என்பார்கள். இப்படிப்பட்டவர்களை சுருக்கமாகவும் சற்று மலினமாகவும் lefties என்பவர்களும் உண்டு. Southpaws என்றும் அழைப்பதுண்டு. Ambidextrous persons வேறுவகைப் பிரிவினர்.

இவர்களால் சிவாஜி பட ரஜினிபோல் ஒரே சமயத்தில் இரண்டு கைகளால் இரண்டு ஆவணங்களில் கையெழுத்திட முடியும். டென்னிஸ் விளையாட்டுக்காரராக இருந்தால் வலது கையில் ராக்கெட்டை பிடித்துக் கொண்டு எந்த அளவு லாவகமாக ஆடுகிறாரோ அதே நெளிவு சுளிவுடன் இடது கையில் ராக்கெட்டைப் பிடித்து ஆட முடியும். அதாவது இரண்டு கைகளாலும் எந்த செயலையும் எளிதாக செய்யக் கூடியவர்களே ambidextrous நபர்கள்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்