Incite என்பது ஒன்றைத் தூண்டுவது. The mob was incited to rob the shops.
Insight என்பது ஒரு கடினமான சூழல்
அல்லது கடினமான பிரச்சினை உருவாகும்
போது அது குறித்த ஆழ்ந்த புரிதல். The psychiatrist had wonderful insight into human relationships.
RBI tweaks என்றது ஒரு செய்தித் தலைப்பு. Tweak என்பது என்ன?
சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்களை செய்து கொள்வது. தேவைப்படும் சின்ன மாற்றங்களை செய்துகொள்ள ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது என்று அந்த செய்தித் தலைப்புக்குப் பொருள்.
Flea, flee, fleece வித்தியாசத்தை உணர்த்துவீர்களா?
Flea என்பது தெள்ளுப் பூச்சி. உண்ணி (ஈயைக் குறிக்கும் சொல் fly).
Flee என்பது ஒருவரிடமிருந்தோ ஒன்றிட
மிருந்தோ ஓடிப்போதல். அதாவது அச்சம் அல்லது ஆபத்து காரணமாக தப்பி ஓடுதல். The robbers fled the country.
Fleece என்பது செம்மறி ஆட்டின் ரோமம்.
வெதுவெதுப்பான செயற்கைத் துணியால் செய்யப்பட்ட சட்டையையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.
Fatal accident என்றால் மிக மோசமான விபத்தா?
இறப்பை உண்டாக்கக்கூடிய அளவுக்கு மோசமான விபத்து. This disease is fatal என்றால் இந்த நோய் இறப்பை உண்டாக்கக் கூடியது. Fatal shooting ஒன்று நடந்து விட்டது என்றால் அந்த துப்பாக்கிச் சூட்டில் யாரோ இறந்திருக்கிறார்கள் என்று பொருள்.
Fatal என்பதற்கு சம வார்த்தைகளாக deadly, mortal, lethal போன்றவற்றை கூறலாம். (We are not immortals என்றால் நாம் எல்லோருமே இறந்துபோகக்கூடியவர்கள் என்று பொருள்). Fatal stress என்றால் இறந்து விடும் அளவுக்கு மன உளைச்சல்.
Fatal error அல்லது fatal mistake என்றால் மிக மிக சீரியஸ் ஆன ஒரு தவறு. அதன் விளைவு மிக மோசமானதாக இருக்க வாய்ப்பு உண்டு.
பொது இடத்தில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்குமிங்கும் மெதுவாக நடக்கிறார். நடுநடுவே நிற்கிறார். அவரை trespasser எனலாமா? Criminal எனலாமா?
குற்றம் புரிந்திருந்தால்தான் criminal. பொது இடத்தில் ஒருவர் நுழைவதும் நடப்பதும் பொதுவாக tresspass ஆகாது. நீங்கள் குறிப்பிடுபவரை loiterer என்று குறிப்பிடலாம்.
ஜோதிடம் என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான jyotish எப்படி வந்தது?
அந்த சொல்லின் அடிப்படை ஆங்கிலமல்ல. அது சமஸ்கிருதச் சொல். ஜ்யோதி, இஷா ஆகிய சொற்களின் சங்கமம். ஒளியியல் என்று கூறலாம். ஜோதிடத்தை ஆங்கிலத்தில் astrology என்பார்கள். கிரேக்க மொழியில் astron என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago