Puzzle என்றால் புதிர். பெரும்பாலும் சீரியஸாக இருக்கும். Riddle என்பது வேடிக்கையானது. குழந்தைகள் அல்லது குழந்தை மனம் கொண்டவர்கள் இவற்றுக்கு பதில் சொல்ல பிரியப்படுவார்கள். எடுத்துக்காட்டுகள்:
1. I give milk and I have a horn, but I’m not a cow. What am I? - Answer: A milk truck.
2. ஆங்கில எழுத்துக்களில் B ஏன் நடுங்கிக்கொண்டே இருக்கிறது? - ACக்கு நடுவில் இருப்பதால்.
Polarity of characters என்பது எதைக் குறிக்கிறது? - ‘அவர்கள் வட துருவம் தென் துருவம் போல வாழ்ந்தார்கள்’ என்றால் அவர்கள் எதிரெதிரான கொள்கைகளையும் எண்ணங்களையும் கொண்டிருந்தார்கள் என்று குறிக்கிறோம் இல்லையா, அதுதான் polarity of characters.
Em dash என்பதும் hyphen என்பதும் ஒன்றைத்தான் குறிக்கின்றனவா? - Hyphen என்பது சிறிய கோடு. Check-in, father-in-law, know-how போன்ற வார்த்தைகளில் இடம்பெறுவது. Em dash என்பது சற்றே நீண்ட கோடு. கால்புள்ளி, அரைப்புள்ளி போன்றவற்றுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.
» புதுமை புகுத்து 24: யானையே உன் பெயர் என்ன?
» பணவீக்கத்தால் இந்திய வீடுகளில் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு: CRISIL தகவல்
Mr.Vinu, a man I always suspected, turned out to be culprit.
Mr.Vinu – a man I always suspected – turned out to be culprit.
I think something is wrong with him; he thinks he is a goat.
I think something is wrong with him – he thinks he is a goat.
நேரு தன் மேஜையில் வைத்திருந்த ஒரு பாடல் The woods are lovely dark and deep என்று தொடங்குவதாக ஒரு கட்டுரையில் படித்தேன். Woods என்பது என்ன? - அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவர் எழுதிய பிரபல கவிதையின் ஒரு வரி. Wood என்பது வனத்தைக் குறிக்கிறது. சிறிய காடு.
அதன் பன்மைதான் woods.
மகிழ்ச்சியான அல்லது அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்படும்போதும் ஒருவர் முகத்தில் அது குறித்த இயல்பான உணர்வு புலப்படவில்லை என்றால் அதை wooden expression என்பார்கள்.
படிப்ஸ் என்பதன் ஆங்கிலச் சொல் எது? - நவீன தமிழ்த் திரிபுகளை அதிகம் அறியாதவர்களுக்கு முதலில் படிப்ஸ் என்றால் என்ன என்பதைக் கூறிவிடலாம். நன்றாக, நிறையப் படிப்பவரை படிப்ஸ் என்ற சொல்லால் பிற மாணவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு விதத்தில் இது பாராட்டுச் சொல் என்றாலும், இது ஒரு கேலியாகவே ('சரியான புத்தகப் புழு, பிற நவீன விஷயங்களில் கவனம் செலுத்தாதவர்’ என்ற கோணத்தில்) இதை வகுப்பின் பிற (கடைசி பெஞ்ச்) மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலத்தில் nerd என்று ஒரு சொல் இருக்கிறது. ஆழமான தொழில்நுட்ப அறிவு கொண்டவரை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். கூடவே ‘தியரியாக எல்லாம் தெரியும். ஆனால் நடைமுறைக்கு ஏற்ப வாழாதவர்’ என்கிற பொருளில்தான் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
21 hours ago
வெற்றிக் கொடி
21 hours ago
வெற்றிக் கொடி
21 hours ago
வெற்றிக் கொடி
21 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago