உயிரியல் பூங்கா செல்ல பழகு!

By செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகளுக்காக புதுப்பிக்கப்பட்ட இருப்பிடத்தில் யானைகள் குளிக்க நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில் மிகவும் பெரியது, பிரசத்தி பெற்றது வண்டலூர் உயிரியல் பூங்கா. இச்சரணாலயம் நவீனமாகவும் அறிவியல்பூர்வமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரிய வகை விலங்குகளும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பொழுதுபோக்கிற்காகவும் உயிரியல் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்காகவும் இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை வந்து பார்வையிடுவது வழக்கம்.

1, 490 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் வண்டலூர் பூங்காவில் 21 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகளுக்கான இருப்பிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரோகிணி, பிரக்ருதி ஆகிய இரு யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்குத்தான் புதிய நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் யானைகள் இருப்பிடத்தையும் நீச்சல் குளத்தையும் கண்டு ரசித்து வருகின்றனர். இத்தகைய உயிரியல் பூங்காக்களுக்கு மாணவர்களை அழித்துச் செல்வதை பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் தங்களது முக்கிய கடமையாக ஏற்றுச் செய்ய வேண்டும்.

செடி, கொடிகள், வன உயிரினங்கள் மீது அன்பும் அக்கறையும் பாராட்டும் பண்பை இதன் வழியாக இளம் தலைமுறையினரிடையே வளர்க்கலாம். அலைபேசியில் மூழ்கித் தவிக்கும் இளையோரை கண்டு வெறுமனே கவலை கொள்வதற்குபதில் இத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்று ஏற்பாடுகளை செய்தால் அன்பும், பண்பும், அறிவும் நிறைந்ததாக மாணவச் சமுதாயம் உருவெடுக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE