தன்னம்பிக்கைக்கு பிரத்யேக நூலகம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள சிறை நூலகங்களுக்கு 1500 புத்தகங்களைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறைவாசிகளிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், மனதில் நற்சிந்தனைகளை விதைக்கவும் மத்திய சிறைகள், மகளிர் சிறைகள், தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறார் சிறை ஆகியவற்றில் சிறை நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதுபோல நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ, மாணவிகளை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதற்கு பிரத்யேக முன்னெடுப்பு அவசியமாகிறது. பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் மூலம் வாசிப்பு பழக்கம் அதிகமாகியிருந்தாலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கணிசமான அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது கல்வியாளர்களின் ஆதங்கம்.

போட்டித்தேர்வுகளில் தோல்வியுற்றால் தற்கொலை முடிவைத் தேடும் போக்கு மாணவர்களிடம் காணப்படுகிறது. தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுபற்றி ஒருவாரம் பரபரப்பாக பேசுவதும் தற்கொலை தடுப்பது குறித்த விவாதமும் சூடுபறக்கும். அத்துடன் அவ்வளவுதான். மாணவர்களிடம் திடமான, தீர்க்கமான, நிரந்தர தீர்வுக்கு வழிகாண்பதே நல்ல பலனைத் தரும். அதற்கு வாசிப்பு இயக்கம் போல மாணவர்களிடம் தன்னம்பிக்கை, தைரியத்தை வளர்க்க சிறை நூலகம் போல பள்ளிகளில் பிரத்யேக நூலகங்களை அரசு ஏற்படுத்தலாம். அதன்மூலம் தற்போதைய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீர்மிகு வகுப்பறை, இணையவழி கற்றல் போன்ற பல வழிகளில் கல்வியாளர்கள், சாதனையாளர்கள், புகழ்பெற்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து மாணவ, மாணவிகளை எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட புதிய தலைமுறையினராக உருவாக்க அரசு முன்வர வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE