மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதற்காகவே உலக சகிப்புத்தன்மை தினம் உருவாக்கப்பட்டது. காந்தியடிகளின் 125-வது பிறந்தநாளை ஒட்டி உலக சகிப்புதன்மை தினத்தை அனுசரிப்பது என ஐநா சபை முடிவெடுத்தது. பிறகு 1996-லிருந்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கான விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16 அன்று வழங்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டது. மக்களுக்கு அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே எட்டு மாதங்களாக யுத்தம் நடக்கும் நிலையில் உலக சகிப்புத்தன்மை தினம் முக்கியத்துவம் பெறுகிறது.