FIFA WC 2022 | கால்பந்து திருவிழாவுக்கான 8 மைதானங்களின் சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த மைதானங்கள் தொடர்பான ஒரு பார்வை…

லுசைல் ஐகானிக் மைதானம்: மத்திய தோகாவில் இருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் 2 லட்சம் மக்கள் வசிக்கும் லுசைல் நகரில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. லுசைல் மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கத்தாரில் உள்ள மிகப்பெரிய மைதானம் இதுதான். டிசம்பர் 18-ம் தேதி இந்த மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மேலும் லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றின் ஒரு போட்டி, ஒரு கால் இறுதி ஆட்டம், ஒரு அரை இறுதி ஆட்டம் இந்த மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. லயோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி பங்கேற்கும் இரு ஆட்டங்களும், நெய்மரை உள்ளடக்கிய பிரேசில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய போர்ச்சுகல் அணியின் ஆட்டங்களும் இதில் அடங்கும். உலகக்கோப்பைக்குப் பிறகு மைதானத்தை சமூக மையமாகமாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன.

அகமது பின் அலி மைதானம்

அகமது பின் அலி மைதானம்: அல் ரய்யானில் அமைந்துள்ளது அகமது பின் அலி அமைதானம். கத்தாரின் புகழ்வாய்ந்த அல் ரய்யான் கிளப்பின் சொந்த மைதானம். இங்கு 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும். லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றின் ஒரு ஆட்டம் இங்கு நடைபெறுகிறது. அமெரிக்கா – வேல்ஸ், அமெரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டங்களும் இதில் அடங்கும். இந்த மைதானம் பாலைவனத்தை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், போட்டிகள் முடிவடைந்த பின்னர் மைதானத்தின் இருக்கைகள் பாதியாக குறைக்கப்படும்.

கலீஃபா சர்வதேச மைதானம்

கலீஃபா சர்வதேச மைதானம்: கலீஃபா சர்வதேச மைதானம் தோகாவில் அமைந்துள்ளது. இங்கு 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். 1976-ல் இந்த மைதானம் கட்டப்பட்டது, கத்தாருக்கு உலகக் கோப்பையை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு இருந்த ஒரே மைதானம் இதுதான். 2011 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி, 2019-ம் ஆண்டு கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. உலகக் கோப்பைக்காக இந்த மைதானம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றின் ஒரு ஆட்டம் மற்றும் 3-வது இடத்துக்கு ஆட்டம் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து – ஈரான், ஜப்பான் – ஸ்பெயின் அணிகள் மோதும் ஆட்டங்களும் இதில் அடங்கும்.

அல் துமாமா மைதானம்

அல் துமாமா மைதானம்: அல் துமாமா மைதானம் தோகாவில் அமைந்துள்ளது. இங்கு 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். இந்த மைதானம் காஃபியா வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது, இது மத்திய கிழக்கு முழுவதும் ஆண்கள் அணியும் பாரம்பரிய தொப்பி ஆகும். உலகக் கோப்பைக்குப் பிறகு மைதானத்தின் இருக்கைகள் 20 ஆயிரமாக குறைக்கப்பட உள்ளது. லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றின் ஒரு ஆட்டம், கால் இறுதி சுற்றின் ஒரு ஆட்டம் இங்கு நடைபெறுகிறது. இதில் பெல்ஜியம் – மொராக்கோ, அமெரிக்கா – ஈரான் அணிகள் மோதும் ஆட்டங்களும் அடங்கும்.

அல் ஜனூப் மைதானம்

அல் ஜனூப் மைதானம்: அல்-வக்ரா நகரில் தோஹாவின் தெற்கே அமைந்துள்ள இந்த மைதானத்தின் வடிவமைப்பு முத்து மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று உள்ளது. இங்கு 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். இங்கு லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றின் ஒரு ஆட்டம் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி தனது 3 லீக் ஆட்டங்களையும் இந்த மைதானத்தில்தான் விளையாடுகிறது.

மைதானம் 974

மைதானம் 974: மைதானம் 974, தோகாவில் அமைந்துள்ளது. தோகாவின் கடற்பகுதியில் ஷிப்பிங் கொள்கலன்களால் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த மைதானம் முற்றிலும் அகற்றப்படும். இந்த வகையில் உலகக்கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முதல் மைதானம் இதுதான். 974 என்ற எண் கத்தாருக்கான சர்வதேச தொலைபேசி குறியீடாகும், ஆனால் அரங்கத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையையும் இது குறிக்கிறது.

எஜூகேசன் சிட்டி மைதானம்

எஜூகேசன் சிட்டி மைதானம்: எஜூகேசன் சிட்டி மைதானத்தில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். "பாலைவனத்தில் வைரம்" என்று அழைக்கப்படும் எஜூ கேசன் சிட்டி மைதானத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிஃபா கிளப் உலகக் கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு அரபு கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. கால்பந்து திருவிழா முடிவடைந்ததும் இந்த மைதானத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட உள்ளது. இந்த இருக்கைகள் வளரும் நாடுகளுக்குநன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல் பேத் மைதானம்

அல் பேத் மைதானம்: அல் பேத் மைதானம் அல் ஹோர் நகரில் அமைந்துள்ளது. இங்கு 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். அல் பேத் மைதானத்தின் மேற்கூரை உள்ளிழுக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. கத்தாரின் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படும் கருப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட கூடாரமான "பைத் அல் ஷார்" போன்று இம் மைதானம் கட்டப்பட்டுள்ளது. போட்டிகள் முடிவடைந்த பின்னர் மைதானத்தின் மேல் அடுக்கு அகற்றப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்