வெற்றிலை மகத்துவம் அறிவோமே

By செய்திப்பிரிவு

வீடு, கடை, தொழி்ற்சாலை, வயல் என எங்கு என்ன விசேஷம் நடந்தாலும் அங்கு தவறாமல் இடம்பெறுவது வெற்றிலை. அப்படி அதற்கு என்ன சிறப்பு?

பச்சை பசேல் என யானையின் காது மடல் போல் இருந்தாலும் வடிவில் சிறியதுதான். வெற்றி லையை வளர்க்க தனி இடம் தேவையில்லை. வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசேஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது.சிறியவர்முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் வெற்றிலையைப் பற்றி, 20-ம் நூற்றாண் டில் பிறந்த உணவு விஞ்ஞானிகே.டி. ஆச்சாயா "இந்திய உணவின் வரலாற்று அகராதி" என்ற தனது புத்தகத்தில் “வெற்றிலை தென்கிழக்கு ஆசியாவில் இருந்துவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். சுபத்ரா, ஜாவா, மலாய் தீபகற்ப நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வெற்றிலை பயிரிடப் படுகிறது. இதன் ஆங்கில பெயர்“பெடல் லீவ்ஸ்” இதன் தாவரவியல் பெயர் “பைபர் பெடல்” ஆகும்.

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம் டூம் டையா.. என இரண்டு கைகளையும் தரையில் கைவிரல்களை விரித்து வைத்து விளையாடும் நாம் அதன் மகத்துவத்தையும் அறிந்து கொள்ள லாமே.... வெற்றிலையில் 3 வகை உண்டு. சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை. இதில், கற்பூர வெற்றிலை கற்பூரமணத்துடன் சற்று காரம் தூக்கலாக இருக்கும். கம்மாறு வெற்றிலையில் காரத்திற்கு பஞ்சமிருக் காது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோர் உடல் நலத்திற்கும் பயன்தர வல்லது வெற்றிலை. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பலவற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE