விழுப்புரம் | தென்பெண்ணை ஆற்றில் உலக ஆறுகள் தினம் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் உலக ஆறுகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சார்பில் உலக ஆறுகள் தினம் விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் - குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இதில் கரிகால் சோழன் பசுமை மீட்புப் படையை சேர்ந்த அகிலன், யாதும் ஊரே யாவரும் கேளிர் நாராயணன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்ததெய்வசிகாமணி, ரஃபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது, எல்லீஸ் அணைக்கட்டு, தளவானூர் தடுப்பணை ஆகியவற்றை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்களாக வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE