சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்று முதல் (ஜூலை 4) விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டது.
இதை எதிர்த்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். தற்காலிக ஆசிரியர் நியமன முடிவைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அது தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு நீங்கவில்லை.
தற்காலிகம் என்பதை தடை செய்துவிட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் தகுதியையும், திறமையையும் நிரூபித்திருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தத் தேவையில்லை.
இந்தியாவின் பல மாநிலங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. 2018-ம் ஆண்டில் போட்டித்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது அதை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போட்டித் தேர்வு முறை ரத்து செய்யப்படும், தற்காலிக நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், அந்த இரு வாக்குறுதிகளையும் மீறுவது நியாயமல்ல.
எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
# இடைநிலை ஆசிரியர் பணிக்கு டெட் முதல் தாளிலும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் 2-ம் தாளும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
# முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிபவர்கள் அல்லது டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
# முதுநிலை ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வில் பங்கேற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அல்லது பள்ளி அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
# தகுதி பெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்து, அவர்களின் திறனை அறிய வேண்டும்.
# பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர் உடனே விடுவிக்கப்படுவார் என்பதை பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
# இன்றுமுதல் (ஜூலை 4) முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உயர்கல்வி தகுதிச் சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago