பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிய நவ.12ல் தேசியக் கணக்கெடுப்பு

By செ.ஞானபிரகாஷ்

பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிய வரும் 12-ம் தேதி புதுச்சேரி முழுக்க தேசியக் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக மத்தியக் கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தேசியத் திறன் கணக்கெடுப்பை (நாஸ்) நடத்தி வருகிறது.

இந்த தேசியத் திறனடைவுக் கணக்கெடுப்பு 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. இவ்வருடம், இந்த கணக்கெடுப்பு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம், இந்த கணக்கெடுப்பை நடத்தும் வழிமுறைகளையும், கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது.

புதுச்சேரியில், இந்த தேசியத் திறன் கணக்கெடுப்பு 313 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 14,749 மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடக்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் கன மழை காரணமாக அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தேசியக் கணக்கெடுப்புக்குத் தேர்வான பள்ளிகள் மட்டும் இயங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்