12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19-ம் தேதி வெளியிடப்பட்டன. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு ஆக.6-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. துணைத் தேர்வு முடிவுகள் செப்.13-ல் வெளியாகின. இதில், திருப்தி இல்லாதவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் நாளை (அக்.22) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் www.dge.tn.gov.in இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
» இல்லம் தேடிக் கல்வி திட்டம்: சிறந்த சின்னத்தை உருவாக்குவோருக்கு ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago