மதுரை மாவட்டத்தில் இன்று (அக்.20) நடைபெற்ற கல்விக்கடன் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இம்முகாமில் 1355 மாணவர்கள் தங்களது உயர் கல்விக்காக கல்விக்கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று மட்டும் 171 மாணவர்களுக்கு 11.81 கோடி ரூபாய் உடனடியாக இந்த முகாமிலேயே வழங்கப்பட்டுள்ளது.
இந்த முகாமினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட மதுரை மாவட்ட மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம் , வங்கி அதிகாரிகள், அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம், NSS தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவறவிடும் மாணவர் யாரும் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
12 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
26 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago