ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து தொடர் விடுப்பு எடுக்க ஏதுவாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் கல்வியாண்டு, கோவிட் 2-வது அலை காரணமாக சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது.
இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், வாரத்தில் 6 நாட்கள் திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை இயங்கி வருகின்றன. இதற்கிடையே வியாழன், வெள்ளியன்று வரும் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து தொடர் விடுப்பு எடுக்க ஏதுவாக சனிக்கிழமை (16.10.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில், ''பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றிப் பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago