இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் நடத்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான (CA Foundation course) நுழைவுத்தேர்வில், புதுச்சேரி ஆதித்யா பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நான்கு பேர் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் நிலைத் தேர்வில் இருவர் வென்றுள்ளனர்.
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்படும், பட்டயக் கணக்காளர் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, இந்தியா முழுவதும் பல நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த நுழைவுத்தேர்வு, முதல்நிலை, இடைநிலை, இறுதி என மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு நான்கு பாடப் பகுதிகளுடன் ஒரு பாடத்துக்கு நூறு மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்களைக் கொண்டது.
இத்தேர்வில், புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் வணிகவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற கிருபாகரன், ஸ்ரீஅமுருதா, வர்ஷா, காவியா ஆகியோர் முதல் நிலையில் சிஏ ஃபவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று, இடைநிலைத் தேர்விற்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவன் கிருபாகரன் 400க்கு 296 மதிப்பெண்களுடன் சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சாய் சத்தியா, நிலவரசி ஆகிய இருவரும் இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளி நிறுவனர் ஆனந்தன் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago