முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

By க.சக்திவேல்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது, கட்டண விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 2021-ல் 40 வயது நிரம்பியிருக்கக் கூடாது.

கணினித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெறும். கணினித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்குத் தகுதி பெறுவர். இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும்.

இந்த இலவசப் பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் உரிய விவரங்கள், புகைப்படத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக்தில் அடுத்த வார இறுதிக்குள் சமர்ப்பித்து, பயிற்சி வகுப்புக்குப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55938 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்''.

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்