பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது: விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்

By செய்திப்பிரிவு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் செப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது.

முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 87,291 பேர் மாணவர்கள். 51,730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றனர்.

இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17-ம் தேதி தொடங்கியது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதன்படி தரவரிசைப் பட்டியலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு இன்று (செப்.27) முதல் அக்.5 வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. 14,789 முதல் 45,227 வரை உள்ளவர்களுக்கு அக்.1 முதல் அக்.9 வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவர்களுக்கு அக்.5 முதல் அக்.13 வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, எண் 86,229 முதல் ஒரு லட்சத்து 36,973 வரை உள்ளவர்களுக்கு அக்.9 முதல் அக்.17 வரையில் 4-வது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன. இடங்களைவிட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்