பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.21) கடைசி நாள் ஆகும்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
இந்த ஆண்டு முதல், ஜேஇஇ மெயின் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் 2021 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டன.
அதேபோல 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் ஜூலை 3-ம் தேதி தொடங்குவதாக இருந்து, கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளன.
» 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
» கருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இதற்கு விண்ணப்பிக்க இன்று (செப்.21) கடைசித் தேதி ஆகும். முன்னதாக விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கியது. செப்.25-ம் தேதி நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ளன.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் - ரூ.2,800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு - ரூ.1,400. இந்த ஆண்டு தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago