‘இந்து தமிழ் திசை’ வெளியீடு: ஆசிரியரும் பெற்றோரும் மாணவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

By செய்திப்பிரிவு

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியோடு, சமுதாயத்தையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர் உண்டு.​ அந்த நல்லடையாள ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்.5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளன்று, ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் அன்புவாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதில், ‘இந்து தமிழ் திசை' பெருமிதம் கொள்கிறது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாகக் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடராக வெளியான ‘அன்பாசிரியர்' புத்தகத்தை சலுகை விலையில் அளிக்கக் காத்திருக்கிறோம்.

மாநிலம் எங்கும் கல்விப் பணியாற்றுவோருக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய, கற்பித்தல் பாதையில் முன்னுதாரணர்களாய்த் திகழும் 50 ஆசிரியர்களைப் பற்றிய தொகுப்பே ‘அன்பாசிரியர்’ புத்தகம். இதில் சொல்லப்பட்ட ஆசிரியர்களின் அனுபவங்கள், கற்பித்தல் முறைகள், சோதனைகளை சாதனைகளாக்கிய விதம், ஆசிரியர்களின் தன்னலமில்லா தொடர் செயல்பாடுகள் ஆகியவை வாசிப்போரை வியப்பில் ஆழ்த்தும். ஒவ்வோர் ஆசிரியரும் பெற்றோரும் மாணவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத்தில் ஒன்றாக இது இருக்கும்.

‘அன்பாசிரியர்’ புத்தகத்தின் விலை ரூ.200. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 20 சதவீதத் தள்ளுபடி விலையில் ரூ.160-க்குப் புத்தகத்
தைப் பெறலாம். இந்த சலுகை விலை செப்டம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை மட்டுமே.

ஆன்லைனில் புத்தகத்தைப் பெற முன்பதிவு செய்ய: https://store.hindutamil.in/bookdetails/337-anbasiriyar.html
கூடுதல் தகவல்களுக்கு: 74012 96562 / 7401329402

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE