கோவை மாவட்டத்தில் இருந்து மாநில நல்லாசிரியர் விருதுக்கு 13 ஆசிரியர்கள் தேர்வு

By க.சக்திவேல்

கோவையைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 385 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில், கோவை மாவட்டத்தில் இருந்து 13 ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

அவர்களின் விவரம்:

1. கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மை.லிட்வின்

2. பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ந.பாலமுருகன்

3. கோவை குரும்பப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இரா.விஜயராகவன்

4. கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் து.பிராங்கிளின்

5. ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெ.அ.அமானுல்லா

6. மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.இந்திரா

7. சூலூர் ஒன்றியம் நாகமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செ.ரஞ்சிதம்

8. கோவை ஆறுமுககவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ர.சத்யபிரபாதேவி

9. கோவை பிரஸ் காலனி, ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ப.சுகுணாதேவி

10. தொண்டாமுத்தூர் ஒன்றியம், கல்வீரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.ச.மகாலட்சுமி

11. கோவை ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வெ.கீதா

12. சூலூர் செஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.மரகதம்

13. ஒண்டிபுதூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அ.மரியஜோசப்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE