நீட் சாராத பட்டப் படிப்புகள்: புதுவையில் விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நீட் தேர்வு சாராத பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசத்தை சென்டாக் நீட்டித்துள்ளது.

புதுச்சேரியில் சென்டாக் மூலம் கல்லூரி மாணவர் சேர்க்கை நடக்கிறது. நீட் சாராத கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நேற்று (ஆகஸ்ட் 31-ம் தேதி) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடு வரும் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிடெக், பிஎஸ்சி, பிவிஎஸ்சி, பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிபார்ம், பிஏஎல்எல்பி, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு இந்த காலக்கெடு பொருந்தும். இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் www.centacpuducherry.in. என்ற இணைய முகவரியைப் பார்க்கலாம் என்று சென்டாக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

12 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

வெற்றிக் கொடி

26 days ago

மேலும்