மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, மருத்துவம்: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக இன்று வெளியான அறிவிப்பு:

''பிறப்பு முதல்‌ 18 வயதிற்குட்பட்ட 7,726 மாற்றுத்திறனாளி மாணவர்கள்‌ பள்ளி வயதை அடைந்த பிறகும்‌, உயர்‌ ஆதரவு தேவைப்படும்‌ (பலதரப்பட்ட குறைபாடுகள்‌, அறிவுசார்‌ குறைபாடு, பெருமூளை முடக்குவாதம்‌, மன இறுக்கம்‌ மற்றும்‌ பல) காரணத்தால்‌ பள்ளிக்கு வர இயலாத நிலையில்‌ உள்ளனர்‌.

அந்த மாணவர்களுக்குக் கல்வி, இயன்முறை மருத்தவம்‌ உள்ளிட்ட சிகிச்சைகளை வீட்டுக்கே சென்று வழங்கி, அவர் தம்‌ கற்றலை மேம்படுத்துவதை இலக்காகக்‌ கொண்டு, ஒரு கல்வித் திட்டம்‌ தொடங்கப்படும்‌.

மாணவருக்கு ரூ.10,000 வீதம்‌ 7,786 மாணவ/ மாணவியர்க்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில்‌ உயர்‌ தொழில்நுட்ப உதவியுடன்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்