18 வயதிற்கு உட்பட்ட சிறந்த குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்புகள்:
''இளந்தளிர் இலக்கியத் திட்டம்
» திருவண்ணாமலை கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி பெயர்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
» மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு
குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் (பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓவியம் தீட்டும் ஆற்றல்) நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் மற்றும் அறம்சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் இளந்தளிர் இலக்கியத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 100 குழந்தை இலக்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும்.
குழந்தை எழுத்தாளர்களுக்குக் கவிமணி விருது
குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட எழுத்தாளர்களில் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ், கேடயத்துடன் 'கவிமணி விருது' வழங்கப்படும்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago