தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை, ஆங்கில வழிப் பாடப்பிரிவைத் தொடங்கக் கருத்துருக்கள் பெறப்பட்டன. அரசாணைகளின்படி, தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது.
» ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை
» ஆசிரியர் தகுதித் தேர்வு வாழ்நாள் முழுவதும் செல்லும்: அரசாணை வெளியீடு
இனிவரும் காலங்களில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், சில அதிகாரப் பகிர்வுகள் அளிக்கப்படும். அதாவது, தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்து, தங்கள் நிலையில் அனுமதி வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது’’.
இவ்வாறு நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
1 day ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
8 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
15 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
22 days ago
வெற்றிக் கொடி
22 days ago