முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

2021- 22ஆம் ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கூறும்போது, ''2021- 22ஆம் ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர்களின் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. 2 ஆண்டு எம்எஸ்சி படிப்பு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி, எம்ஃபில் ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசித் தேதி ஆகும்.

முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://admissions.annauniv.edu/cfa/images/MSC_Advt_2021.jpg

அதேபோல பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேரவும், எம்சிஏ படிப்பில் சேரவும் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கும் செப்டம்பர் 15 மாலை 5.30 மணி கடைசித் தேதி ஆகும்'' என்று தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 1,54,389 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,21,521 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1,05,597 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்