மதுரையில் 2021 பேர் 2021 நிமிடங்களில் ஆன்லைனில் அபாகஸ் பயிற்சி மேற்கொண்ட நிகழ்வு, கலாம் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மதுரை பிரைனிபாப்ஸ் இன்டர்நேஷனல் அபாகஸ் மூளை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், 2021 நிமிட ஆன்லைன் அபாகஸ் பயிற்சி நடைபெற்றது. சுதந்திர தினமான ஆக. 15 காலை 6 மணி முதல் ஆக. 16 மாலை 4 மணி வரை 2021 நிமிடங்கள் (35 மணி நேரம்) தொடர்ந்து அபாகஸ் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தமிழகத்தில் மதுரை, கரூர், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்கள், 5 மாநிலங்கள், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், கனடா, ஸ்வீடன் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 4 முதல் 78 வயது வரையுள்ள 2021 பேர் பங்கேற்றனர்.
இந்தத் தொடர் அபாகஸ் பயிற்சி, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சாதனை நிகழ்வை பிரைனிபாப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 70 பேர், பல்வேறு ஊர்களில் இருந்து ஒருங்கிணைத்தனர்.
இதுகுறித்து பிரைனிபாப்ஸ் மேலாண்மை இயக்குநர் ஜெயபிரியா, வர்த்தக இயக்குநர் ஜோதிபாசு ஆகியோர் கூறுகையில், ''ஆன்லைன் கல்வியால் குழந்தைகள் போட்டிகளில் இல்லாமல் உற்சாகம் இல்லாமலும் உள்ளனர். இதனால் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அபாகஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சாதனை நடத்தப்பட்டது'' என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago