ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப் பல்கலைக்கழகம்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உடன் காணொலிக் காட்சி வழியாகக் கலந்துரையாடினார். அப்போது இளைஞர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கர்நாடகாவில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்ற பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல விப்ரோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தமிழக அரசு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும், தமிழக இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சிகளையும் விப்ரோ வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், விப்ரோ நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்