புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய பாடப்பிரிவுகள் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளன. இதில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர ஆக.17-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை. முதுநிலை பட்டப் படிப்பு சேர்க்கைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்பிஏ ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க எம்டெக், எம்பிஏ ஆகிய புதிய பாடப்பிரிவுகளும் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளன.
அனைத்திற்கும் பயன்படும் தொழில்நுட்பமான இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், டேட்டா சயின்ஸ் ஆகியவை புதிய முதுகலைப் படிப்புகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகள் புதுவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் எங்கும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் எம்ஐடி சென்னைக்கு அடுத்தபடியாக இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் என்ற முதுகலைப் படிப்பும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
» நீட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
» கோவை தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ஆக.13 வரை விண்ணப்பிக்கலாம்
வெளிமாநில மாணவர்களும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம். இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். புதுவைப் பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டர் தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப்படலாம்.
விரிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://www.pgacpdy.com/ என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும்''.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 hours ago
வெற்றிக் கொடி
5 hours ago
வெற்றிக் கொடி
5 hours ago
வெற்றிக் கொடி
5 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago