பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும்.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 18,120 இடங்கள் உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தொடங்கப்பட்டு நடைபெற்றது. முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே நேரடி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 20-ம் தேதி இணைய வழியில் தொடங்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு இன்று (ஆக.5) கடைசித் தேதி ஆகும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இன்றுக்குள் தொழில்நுட்ப க்கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இணையதள வசதி இல்லாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் www.tngptc.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago