தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து: மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசியின் 12பி எனப்படும் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் நிதியுதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிப்படி, 12பி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் 12பி அந்தஸ்து பெற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.

இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது யுஜிசியின் நிலைக்குழுக் கூட்டத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனிவரும் காலங்களில் யுஜிசி உட்படப் பிற நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெறவும் கல்விசார் திட்டங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது''.

இவ்வாறு பதிவாளர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்