தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப் படிப்புகளில் சேர இன்று (4-ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியைச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
» தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
» கரடிகுளம் நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துக: கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் மனு
3 ஆண்டுகால எல்எல்பி, 2 ஆண்டுகால எல்எல்எம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.tndaluonline.org/#/landing
கூடுதல் விவரங்களுக்கு: 044 – 2464 1919, 044 – 2495 7414
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago