சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்குக் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் தொலைதூர இளங்கலை, டிப்ளமோ, நூலக மேலாண்மைப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளன. அவை ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மாணவர்கள் தங்களின் சேர்க்கை எண்ணைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
அதேபோல முதுகலை, எம்பிஏ, எம்சிஏ தொலைதூரப் படிப்புகள் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
» மதுரை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்த ஆலோசனை
தேர்வு முடிவுகளைக் காண: https://egovernance.unom.ac.in/idedata/ideresult.asp
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
4 hours ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago