சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஆசிரியர்கள் ஒட்டினர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.
இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.
» தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
» மூன்று கவுன்சிலர்களோடு கட்சி தாவிய அதிமுக ஒன்றிய தலைவர்: திமுக கைவசமானது சிவகங்கை ஒன்றியம்
ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.
இதையடுத்து தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.
மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago