தமிழகம் உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரம் கூறும்போது, தற்போது 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்ததற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதில் ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழகம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல கயாவில் உள்ள தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகம் , மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (MANUU), வடகிழக்கு மலை பல்கலைக்கழகம் (NEHU), பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
» அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதிக்குறைவான பேராசியர்கள் நீக்கப்படுவார்கள்: அமைச்சர் பொன்முடி தகவல்
» கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு உண்டா?- மத்திய சுகாதாரத்துறை பதில்
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 22) கூறும்போது, மத்தியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகளுக்கான 22 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 12 இடங்களுக்கான நியமனங்கள் குடியரசுத் தலைவரால் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago