விழுப்புரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட 4 மாவட்டக் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ள நிலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கு இணையாக வசூலிக்கப்படும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம், 4 மாவட்டக் கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள்.
ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கான கட்டணங்கள், தனியார் கல்லூரிகளுக்கு நிகராக வசூலிக்கப்படுகின்றன.
எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமா என இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், தற்போது ஒவ்வொன்றாக சீரமைத்து வருகிறோம். விரைவில் கட்டணத்தைத் திருத்தி அமைப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago