மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உலர் தானியம் வழங்குக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

By கே.சுரேஷ்

கரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், மதிய உணவுக்கு பதிலாக வழங்கப்பட்டு வரும் உலர் தானியங்களை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், முன்னாள் மாநிலச் செயலாளர்கள் ஆர்.விவேகானந்தன், ஆர்.ராஜ்குமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், மத்திய மண்டலப் பொறுப்பாளர் ம.வீரமுத்து, மாவட்டப் பொருளாளர் ஈ.பவனம்மாள், மாவட்டத் துணைத் தலைவர் டி.விமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதில், புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்ய வேண்டும்.

கரோனா ஊரடங்கினால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாததால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக உலர் தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய மற்றும் மாவட்ட மாநாடுகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் வரை ஊருக்குள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ‘எத்திசை செலினும்’ எனம் சிறுகதை நூலுக்கு தமிழக அரசிடம் விருது பெற்ற நூலாசிரியர் அண்டனூர் சுரா எனும் ஆசிரியர் சு.ராஜமாணிக்கம் மற்றும் கரோனா விடுமுறைக் காலத்தில் எளிய முறையில் திருக்குறளைப் பயிற்றுவித்த கோவில்பட்டி ஆசிரியர் சசிகுமார் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

13 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

20 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

27 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்