தமிழகத்தைப் போலவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதுச்சேரியில் இன்று வெளியாகின. புதுச்சேரிக்குத் தனிக்கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்தாகி, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனிக்கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழகக் கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரளக் கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திரக் கல்வி வாரியத்தையும் பின்பற்றி, பயின்று வருகின்றனர்.
கரோனா தொற்றால் தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழகப் பாடத்திட்டத்தைப் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் பின்பற்றி வருவதால் புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
புதுச்சேரி, காரைக்காலில் 14,674 மாணவ, மாணவிகள் தமிழகப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படாத சூழலில் இன்று முடிவுகள் வெளியாகின. காலையிலேயே பலரும் இணையத்தில் மதிப்பெண்களைப் பார்த்தனர்.
தமிழகத்தைப் போன்று 10,11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத்தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு முறையில் 30 சதவீதம் என மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 150 பள்ளிகள் உள்ளன. அதில் மாணவர்கள் 6,884 பேரும், மாணவியர் 7,790 பேரும் என மொத்தம் 14,674 பேருக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
கல்வித் துறைக்கு வந்து தேர்வு முடிவுளை அறிவித்து கல்வியமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிளஸ் 2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரி, காரைக்காலில் 52 அரசுப் பள்ளிகளில் படித்த 6,420 பேர் உட்பட மொத்தம் 14,674 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் புள்ளிகள் விவரத்தோடு வெளியிடப்பட்டுள்ளன. இது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும். புதுச்சேரிக்குத் தனிக் கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago