ராஜஸ்தான் விவசாயியின் 3 மகள்கள் அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (RPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சாதேவ் சஹாரன். இவருக்கு ஐந்து மகள்கள். இவர்களில் மூத்த மகள்களான ரோமா, மஞ்சு ஏற்கெனவே ஆர்ஏஎஸ் (RAS) தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் உள்ளனர். இந்நிலையில் அவருடைய அடுத்த மூன்று மகள்கள் அன்ஷு, ரீது, சுமன ஆகியோரும் ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2018ல் நடந்த தேர்வின் முடிவு கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. இத்தேர்வில் முக்தா ராவ் முதலிடம் பிடித்துள்ளார். மன்மோகன் சர்மா இரண்டாவது இடத்தையும், ஜெய்ப்பூரின் சிவாக்ஷி கண்டால் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களுடன், தேர்வெழுதிய ஹனுமன்கர் சகோதரிகள் அன்ஷு, ரீது, சுமன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரே தேர்வில் சகோதரிகள் மூவர் அரசுப் பணியாளர் ஆனது அப்பகுதியில் கொண்டாட்ட நிகழ்வாக மாறியுள்ளது.
» நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் அரசு; புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு:நமச்சிவாயம் உறுதி
இது தொடர்பாக பிரவீன் கஸ்வான் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னே ஒரு நல்ல செய்தி. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த அன்ஷு, ரீது, சுமன் ஆகிய மூன்று சகோதரிகளும் ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தங்களின் தந்தையையும் குடும்பத்தாரையும் பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் சகோதரிகள் ரோமா, மஞ்சி ஏற்கெனவே ஆர்ஏஎஸ் பணியில் உள்ளனர். இப்போது விவசாயி ஸ்ரீ சாதேவ் சஹாரனின் ஐந்து புதல்விகளுமே ஆர்ஏஎஸ் அதிகாரிகளாகிவிட்டனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
ட்வீட்டுக்கு லைக்குகளும் பின்னூட்டங்களும் குவிந்து வருகின்றன. சகோதரிகளின் சாதனையை இணையவாசிகள் மனமார வாழ்த்திக் கொண்டாடி வருகின்றனர்.
முதல்வர் கெலாட் வாழ்த்து:
இதற்கிடையில், ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த டாப்பர்களை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்திப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், "முக்தா ராவ், மன்மோகன் சர்மா, சிவாக்ஷி காண்டல் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில நலனுக்காக சேவை செய்ய உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago