நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By ஜெ.ஞானசேகர்

சட்டப் போராட்டத்தின் மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட் தேர்வின் தாக்கம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். அதனடிப்படையில், முதல்வர் என்ன உத்தரவிடுகிறாரோ அது செயல்படுத்தப்படும்.

நீட் தேர்வுக்கு 2020-ம் ஆண்டு நவ.9-ம் தேதியில் இருந்தும், ஜேஇஇ தேர்வுக்கு 2021 ஜனவரி 4-ம் தேதியில் இருந்தும் ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால், திடீரென நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது கவலை அளிப்பதாக உள்ளது. கண்டிப்பாக சட்டப் போராட்டத்தின் மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அரசுப் பள்ளிகளில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மாணவர் சேர்க்கை உள்ளதால் பாடப் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடின்றி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளை நாமும் பின்பற்றலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

செல்போன் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். விரைவில் மாணவர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யவுள்ளோம்.''

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்