செவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய வானியல் நிகழ்வு: சிறந்த படங்களுக்குப் பரிசு

By செய்திப்பிரிவு

செவ்வாய், வெள்ளி கோள்கள் இணைதல்: ஜூலை 12 - 13, 2021

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போலவும், வானில் இணைவது போன்றும் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு வரும் ஜூலை 12-13 ஆகிய தேதிகளில் தென்படும்.

ஜூலை 12 மாலை, சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி புலப்படும். ஜூலை 13 அன்று இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், ஜூலை 12 அன்று கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கி வருவது போல வானில் காட்சி தரும். செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் நம்மால் வெறும் கண்களால் காண முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை.

எப்படிப் பார்க்கலாம்?

மேற்கு அடிவானம் தெளிவாகவும் மறைப்பு ஏதும் இல்லாமல் தெரியக்கூடிய ஒரு இடத்தையும் தெரிவு செய்து, சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப் பார்த்தால், இரண்டு கோள்களும் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவதைத் தெளிவாகக் காணலாம்.

கோள்கள் நெருங்குமா?

உண்மையில் இரண்டு கோள்களும் விண்வெளியில் ஒன்றை ஒன்று நெருங்காது, பூமியிலிருந்து காணும்போது அவை ஒன்றை ஒன்று நெருங்குவது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுகிறது. எனினும், இது காண்பதற்கு அற்புதக் காட்சி ஆகும். ஜூலை 13 வரை ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் கண்டு ரசிக்கலாம்.

கோள்களின் இணைவு என்பது இயற்கை நிகழ்வு. இப்படிப்பட்ட வான் நிகழ்வுகள் மனிதர்களுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது.

இந்த அரிய வானியல் நிகழ்வை உங்கள் பகுதியில் நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு, அதன் புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழிச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த புகைப்படங்களுக்குப் பரிசும், சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.

அதுமட்டுமின்றி சிறந்த புகைப்படங்கள் தேசிய அளவில் வெளிவரும் மாத இதழில் வெளியிடப்படும். புகைப்படங்களை galilioscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8778201926 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்பி வைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்